சாலை போடும் பணிகளை நள்ளிரவில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
mkstalin

பருவமழை காரணமாக சென்னையின் பிரதான சாலைகள் சேதமடைந்துள்ளன. அதன் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டனர்.

mkstalin

சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன . இவற்றை விரைவாக சீரமைக்க முதலமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், சென்னை முழுவதுமே சாலை சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் இடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். 

முதலாவதாக மந்தைவெளி பகுதியில் உள்ள வாரன் சாலையில் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, கோடம்பாக்கம் பகுதியில் உள்ள மகாலிங்கபுரம் மெயின் சாலையில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பழைய சாலை முறையாக அகற்றப்பட்டுள்ளதா?, புதிய சாலையின் தரம், தடிமன், உறுதித்தன்மை ஆகியவற்றில் அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் உயர் அலுவலர்களுடன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.