இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் - மு.க.ஸ்டாலின் அதிரடி

 
இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் - மு.க.ஸ்டாலின் அதிரடி

2026 தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.


அதன்படி,

  • 5,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும்.
  • அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகள்
  • 50 புதிய செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.
  • திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மாநகராட்சிகளின் அருகாமையில் நவீன உலகத்தர வசதிகளுடன் புதிய நகரங்கள்
  • அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள்
  • பொள்ளாச்சியில் மொழி போராட்ட காட்சிக்கூடம்
  • பல்வேறு துறைகளில் பணியாற்றும் திருநர், திருநங்கைகளுக்கு விருது வழங்கப்படும்.
  • பிசி, எம்பிசி, டிஎம்சி பிரிவினர் தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடன்
  • அனைட்து மாவட்டங்களிலும் உள் விளையாட்டரங்கம்
  • கடலோரங்களில் மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குளம் அமைக்கப்படும்.
  • வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன். இதனை பயன்படுத்தி வாஷிங்மிஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி போன்ற பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
  • மீன்பிடி தடைகால சிறப்பு நிவாரண தொகை 8000 ரூபாயில் இருந்து 12000  ரூபாயாக  ஆக உயர்த்தப்படும்.மீண்டபிடி குறைவு கால் சிறப்பு நிவாரண தொகை 6 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  • நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய்.3500 ஆகவும் கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூபாய் 4500 ஆகா உயர்த்தி வழங்கப்படும்.
  • உயர்க்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க நடவடிக்கை