முனைவர் பட்டம் பெற்ற பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 
stalin

பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில், முனைவர் @RKRadhakrishn-க்கு வாழ்த்துகள். ஆண்டுகள் எத்தனையானாலும் அறிவுதேடலுக்கு எல்லை இல்லை எனப் பயணிக்கும் நீங்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பியவுடன் சந்திப்போம்! என்று பதிவிட்டுள்ளார்.


இதற்கு நன்றி தெரிவித்துள்ள முனைவர் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்,  உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.  தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு  (Srilankan Refugees) தமிழ்நாடு  அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எனது உரையில் குறிப்பிடுவதில் பெருமிதம் கொண்டேன். என்று குறிப்பிட்டுள்ளார்.