“நான் யோகத்தை நம்புபவன் இல்லை; உழைப்பை நம்புபவன்”- மு.க.ஸ்டாலின்
பச்சை துண்டை போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழர் என்ற உணர்வு இருந்தால் இதற்காவது பழனிசாமி வாய் திறப்பாரா? அவதூறுகள் பேசுவதற்கு மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி வாய் திறப்பாரா? பச்சை துண்டை போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. உண்மையான விவசாயிகாக இருந்தா இந்தியா முழுக்க உழவர்கள் எதிர்த்து போராடிய 3 வேளாண் சட்டங்களை ஆதரிச்சிருப்பாரா? போராடிய விவசாயிகளை Broker கள் என சொன்னவர்தான் புளுகுமூட்டை பழனிசாமி. 200 தொகுதிகளில் வெல்வோம் என சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது 200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது.
எடப்பாடி 4 ஆண்டுகளில் நெல்லுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தவே இல்லை. நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3.500 ரூபாய் வழங்குவோம் ஒன்றிய அரசு முடிந்தால் தடுக்கட்டும் பார்க்கலாம். காவிரி காப்பான் என்று பெயர் வைத்துக்கொண்டவர் வேளாண் விரோத சட்டத்தை எதிர்க்கவில்லை, போலி விவசாயி பழனிசாமி. நான் யோகத்தை நம்புபவன் இல்லை, உழைப்பை நம்புபவன். இரண்டாவது முறையாக முதல்வராவேன், தமிழ்நாட்டை உயர்த்தி காண்பிப்போம்.தேர்தல் அறிக்கை 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் திட்டம் தரமான பொருட்கள் வாங்கிக்கலாம். கணவர்கள் யாராவது தொந்தரவு செய்தால் இந்த அண்ணனிடம் கூறுங்கள், நான் பார்த்துக்குறேன்.... சொன்னபடி அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். தஞ்சாவூர் தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் தி.மு.க வின் வாக்கு களஞ்சியம். பிறந்தவர்கள் அனைவருக்கும் மரணம் உண்டு, ஆனால் நான் கொண்டுவந்துள்ள திட்டம் என்றும் இருக்காது. தமிழ்நாட்டின் வெற்றிக்காக போராடுகிறோம்” என்றார்.



