Best புதுச்சேரி Worst புதுச்சேரியானது: மு.க.ஸ்டாலின்
கடந்த தேர்தலின் போது Best புதுச்சேரியாக மாற்றுவோம் என்றார் மோடி, ஆனால் புதுச்சேரி Worst புதுச்சேரியாக மாறிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த தேர்தலின் போது Best புதுச்சேரியாக மாற்றுவோம் என்றார் மோடி, ஆனால் புதுச்சேரி Worst புதுச்சேரியாக மாறிவிட்டது. எந்த முகத்தை காட்டி புதுச்சேரியில் வாக்கு கேட்க பிரதமர் மோடி வருகிறார். அரசியல் மாண்புகளை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. புதுச்சேரி மண் தனது பாரம்பரிய பெருமைகளை இழந்து கொண்டிருக்கிறது. டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு தலையாட்டும் அடிமைகளை தமிழகம் விரும்பவில்லை. பாஜகவின் கொட்டத்தை அடக்கும் வகையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாகியுள்ளது. திமுக - காங்கிரஸ் வேட்பாளர்கள் 30 பேரையும் வெற்றிபெற வைக்க வேண்டும். ரங்கசாமியை பொம்மை போல் வைத்துள்ளது பா.ஜ.க. புதுச்சேரி மாநிலம் ஆக வேண்டும்.
ஆளுநரை வைத்து தன்னை ஊராட்சி மன்ற தலைவர் போல நடத்துவதால் உள்ளாட்சி தேர்தலை மறந்துவிட்டாரா ரங்கசாமி. புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தினார்களா? பீகாரில் நிதிஷ்குமாருக்கு வந்த நிலை ரங்கசாமிக்கு வராது என என்ன நிச்சயம்? அவரை எப்போது, எப்படி கவிழ்க்கலாம் என்றே பாஜக சிந்திக்கிறது.” என்றார்.

