“பிரகாசமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில், வெற்றி நமதே.” - ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்..

 
 “பிரகாசமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில், வெற்றி நமதே.” - ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்..  “பிரகாசமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில், வெற்றி நமதே.” - ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்..


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி முதலைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  ராகுல் காந்தி இன்று ( ஜூன் 19) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் , பல்வேறு கட்சித் தலைவர்கள் , தொண்டர்கள்  என பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

Rahul

ராகுலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் சகோதரரும், இலட்சியவாதியுமன ராகுல் காந்திக்கு  மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இது இரத்த பந்தம் அல்ல..; சிந்தனை, தொலை நோக்கத்தால் பிணைக்கப்பட்ட பந்தம். நீங்கள் தொடர்ந்து உறுதியாக நின்று தைரியத்துடன் வழிநடத்துவீர்கள். பிரகாசமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில், வெற்றி நமதே.” என்று குறிப்பிட்டுள்ளார்.