படமாகும் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க நடிகர் சமுத்திரகனி முயற்சிகள் எடுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க நடிகர் சமுத்திரகனி முயற்சிகள் எடுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் ஸ்டாலின் பற்றிய பல்வேறு தகவல்களை சேகரித்து வருவதுடன், அவரது பழைய நண்பர்களை சந்தித்து விவரங்களை திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. முழு திரைக்கதை உருவான பிறகே தயாரிப்பு பணிகள் துவங்கும் எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2027ல் படப்பிடிப்பு துவங்கப்படலாம் என கூறப்படும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும், நடிகை கயாடு லோகரும் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

