செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. தனது மகளின் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்ள வந்த முதலமைச்சரின் கையை பிடித்து புன்னைகையுடன் அழைத்துச்சென்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. முதல்வர் பங்கேற்ற நிலையில், அந்நிகழ்ச்சிக்கு KC வேனு கோபால்,கிரிஷ் ஜோடங்கர் வரவில்லை. செல்வப்பெருந்தகை மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,விஜய் வசந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

