ரூ.4000 கோடியில் 10,000 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
assembly

முதல்வரின் கிராம சாலை திட்டத்தில் 10,000 கிலோ மீட்டர் கிராம ஊராட்சி சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என  110 வீதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Tamil Nadu: 'Governor post itself has to be removed', says Stalin as  Assembly readopts bills - The Week


இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின்போது 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு க ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். நகரம், கிராமம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து சமூக வளர்ச்சி , அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம். இதில் சாலை வளர்ச்சி மிக மிக முக்கியமானது. கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு வறுமையை ஒழிப்பதில் முக்கிய காரணியாக உள்ளது.

ஒரு லட்சத்து 38 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன. ஊரக சாலைகளில் செய்யப்படும் முதலீட்டிற்கு ஊரக மக்களின் நலனிற்கும் நேரடி தொடர்பு உள்ளது. ஊரக பகுதிகளின் வணிகர் செயல் திறனை அதிகரிக்க சாலை கட்டமைப்பு உதவுகிறது. அதன் மூலம் இடுபொருள் செலவைக் குறைத்து வேளாண் உற்பத்தியை அதிகரித்து ஊரக வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. தரமான சாலைகள் ஊரக மக்களே வருமான அளவை உயர்த்த வழிவகுக்கிறது. கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை வழங்கி அறிவாற்றலை பரவலாக்கி சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைந்து வளர்ச்சியை துரிதப்படுத்த உதவுகிறது.

mk stalin assembly speech on budget Tamilnadu 2022 | MK Stalin Assembly  Speech: சாலை விபத்துகளை குறைக்க என்ன பண்ணிருக்கீங்க.. பதில்களை பட்டியலிட்ட  முதல்வர்..

குக்கிராமங்களை இணைக்கும் சாலைகள் பல்வேறு முக்கிய சாலைகளை கிராமங்களுடன் இணைக்கும் முக்கிய சேவைகளை கிராமங்களுடன் இணைக்கும் சேவைகளை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 13/1/23 அன்று சட்டப்பேரவையில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டத்தின் கீழ் பத்தாயிரம் கிலோ மீட்டர் நீளம் உள்ள ஊராட்சி சாலைகள், கிராம ஊராட்சி 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8,120 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம்,நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் 3 ஆண்டுகளில்   16,596 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் 425 உயர்மட்ட பாலங்கள் திட்டம் போடப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 324 கோடியே 49 லட்சம் இதை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் வரும் இரண்டு ஆண்டுகளில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதலாக, மேலும் 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் 4 ஆயிரம் கோடி செலவில் மேம்படுத்தப்படும்” என தெரிவித்தார்.