முதல்வர் - அமைச்சர் பொன்முடி சந்திப்பு

பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேசிய கருத்து சர்ச்சையான நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடன் சந்தித்து வருகிறார்.
திமுக நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி, வைணவம் மற்றும் சைவம் குறித்தும் விலைமாதுகள் குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அருவருக்கத்தக்க பேசிய வீடியோ வைரல் ஆன நிலையில் பொன்முடியின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார். அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர் பொன்முடி சந்தித்துவருகிறார்.