நீட் தேர்வு ரத்து என்னாச்சு? பேரவையில் ஈபிஎஸ்- ஸ்டாலின் இடையே வார்த்தை போர்
![s](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/beba5bac16413ef3ad3f5ad412fdb0a6.webp)
நீட் தேர்வு ரத்தில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது என்றும், நீட் தேர்வை ஒன்றிய அரசு தான் ரத்து செய்ய முடியும் என பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார்.
ஆளுநர் உரை மீதான விவகாரத்தில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய நிலையில், 4 ஆண்டுகள் ஆகிவிட்டது, நீட் தேர்வுக்கு தமிழ்நாடு விதி விலக்கு பெறுமா என கேள்வி எழுப்பினார். தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம்சாட்டினார். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பது முதலமைச்சருக்கு தெரியவில்லை என்பது ஆச்சர்யமாக இருப்பதாகவும் விமர்சித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர், நீட் தேர்வு ரத்தில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் ஓராண்டு காலம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் இருந்ததாகவும், நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி செய்வோம் என கூறியதாக பதில் அளித்தார். மேலும், நாங்கள் கூட்டணியில் இருந்த வரையில் நீட் தேர்வு உள்ளே வரவில்லை எனவும், நீங்கள் வந்த பிறகு தான் நீட் தேர்வு வந்தது என்றும் கூறினார். மேலும், நீட் தேர்வை ஒன்றிய அரசு தான் ரத்து செய்ய முடியும் என்றும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.