பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
Dec 18, 2025, 08:51 IST1766028085458
பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறைகளில் நெருக்கடி அதிகரித்து வருகிறது. திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசமான சூழ்நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள், குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு இருதரப்பு ஒப்பந்தம் மூலம் இந்த வரிச் சிக்கலை விரைவில் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


