லட்சியப் பாதையில் முன்னேறு - உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
Nov 27, 2026, 10:21 IST1795755119605
உதயநிதி ஸ்டாலினுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் லட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது.
திமுகவின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்... “Let your work define you” உழைப்பால் உயர்ந்திடு! லட்சியப் பாதையில் முன்னேறு! கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

