"stay calm, do your best"- பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 
student with mk stalin

மதிப்பெண்கள் உங்கள் அறிவுத் திறனுக்கான மதிப்பீடுகள் அல்ல, வாழ்வின் அடுத்த நிலைக்கான படிக்கட்டுகள் என பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

Image


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மார்ச் 3-ஆம் நாள் திங்கள்கிழமை பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்குகிறது,  தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3316 மையங்களில்  எழுதும் சுமார் 8.21 லட்சம் மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதவுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களே… மதிப்பெண்கள் உங்கள் அறிவுத்திறனுக்கான மதிப்பீடுகள் அல்ல; வாழ்வின் அடுத்தநிலைக்கான படிக்கட்டுகள் Stay calm, do your best, and succeed. All the best!” எனக் குறிப்பிட்டுள்ளார்.