தேநீர் கடையில் பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்து கொண்ட முதல்வர்!

 
stalin

தமிழக முதல்வர் வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில்,  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் சார்பில்,  பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
சென்னை தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று தொடங்கி வைத்த முதல்வர்,  அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

ttn

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் வண்டலூர் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் வழங்கினார். இதையடுத்து நிவாரண முகாமில் தங்கியுள்ள இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உணவு வழங்கிய முதல்வர் கண்டிகையில் தூய்மை பணியாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

ttn

இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யும் வழியில்  செங்கல்பட்டு மாவட்டம் கீழ் கோட்டையூரில் உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்தினார்.  அப்போது அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுடன் உரையாடிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.