அவதூறு விவகாரத்தில் தான் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்: அமைச்சர் நிர்மல் குமார்..!

 
1

மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக எந்த குறிப்பிலும் இல்லை என்றும், இந்திரா காந்தி மற்றும் பெண்கள் குறித்த அவதூறு கருத்துக்களால் தான் அவர் கைதானார் என அமைச்சர் நிர்மல் குமார் சட்டப்பேரவையில் இன்று (செப்.8) தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும், பெண்கள் தொடர்பான வழக்கிற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்றும் சட்டசபையில் அமைச்சர் நிர்மல்குமார் பேசியது பெரும் அமளியை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர். திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்குகள் கூட இருக்கலாம்; ஆனால் அவை எல்லாமே மிசா வழக்குகள் ஆகிவிடாது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. அவர் பெண்கள் தொடர்பான ஒரு வழக்கிற்காகத்தான் கைது செய்யப்பட்டார். '21-வது அம்சத் திட்டம்' என்று கூறி மறைந்த பிரதமர் இந்திரா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதால்தான் ஸ்டாலின் அப்போது கைது செய்யப்பட்டார் என்று கூறினார். மு.க.ஸ்டாலின் கைது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறிய கருத்துக்களுக்கு திமுக உறுப்பினர்கள் உடனடியாக எழுந்து நின்று மிகக் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்தனர். அவையில் கடும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.மேலும், அன்று மு.க.ஸ்டாலின் அவதூறாக செய்ததை தான் இன்று உதயநிதி ஆபாசநதியாக செய்கிறார் என கூறினார்.