ஈரோட்டில் அண்ணா சிலையை திறந்துவைத்தார் மு.க.ஸ்டாலின்

 
MKStalin

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (15.9.2023), ஈரோடு மாநகரத்திற்குட்பட்ட வீரப்பன்சத்திரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட திருவுருவச் சிலையை, முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட வீரப்பன்சத்திரம் பேரூராட்சியாக இருந்தபோது, பேரூராட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலை, தந்தை பெரியார் தலைமையில், முத்தமிழறிஞர் கலைஞரால் 26.10.1969 அன்று திறந்து வைக்கப்பட்டது. தற்போது வீரப்பன்சத்திரம் பேரூராட்சி, ஈரோடு மாநகரத்தோடு இணைக்கப்பட்டு, மாநகரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அங்கே அமைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலை மற்றும் கட்டுமானம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், தற்போது பேரறிஞர் அண்ணாவின் சிலை மற்றும் சிலை அமைந்த இடம் புதுப்பிக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (15.09.2023) கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலைமைச்சருமான மு.க.ஸ்டாலினால் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.