“அரசியல் சாசனத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார்”- மு.க.ஸ்டாலின்

 
ச்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார் இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி. சென்னையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவுக்கோரினார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் விடுதியில் முதல்வர் தலைமையில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெற்றது. அதில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை ஆதரித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் செய்துவிட்டு தமிழர் என்ற முகமூடி அணிந்து ஆதரவு கேட்கின்றனர். இதெல்லாம் பழைய ட்ரிக்.உள்துறை அமைச்சர் தனது பதவியை மறந்து, முன்னாள் நீதியரசரை நக்சல் என்றும் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாத கையாலாகாத நிலையை மறைக்க, நீதியரசர் மேல் பழி போட்டு தப்பிக்க பார்க்கின்றார். இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியை வருக, வருக என வரவேற்கிறேன். குடியரசு துணைத் தலைவர் பொறுப்புக்கு மிகவும் தகுததியானவர் சுதர்சன் ரெட்டி. அவர் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் நேசிப்பவர். அரசியல் சாசனத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார். தென் மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டியின் வாழ்க்கை பயணத்தை அனைவரும் படிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

துணை குடியரசுத் துணைத் தலைவருக்கான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி பேசுகையில், “கூட்டாட்சித் தத்துவத்தை காப்பதில் முன்னோடியாக விளங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கல்வி, சுகாதாரத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தொலைநோக்குப் பார்வையிலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது. தற்போதைய நிலையில் கூட்டாட்சிக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புக்கே ஆபத்து வந்துள்ளது. குடியரசுத் துணை தலைவராக எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் அரசியலமைப்பை காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” என்றார்.