அரசு ஊழியர்கள் மத்தியில் அதிமுக குறித்து ஏத்திவிடும் ஸ்டாலின்

 

அரசு ஊழியர்கள் மத்தியில் அதிமுக குறித்து ஏத்திவிடும் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு மதுரை அரசரடி பகுதியில் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரிமை முழக்கம் உரத்து ஒலிகட்டும் என்ற தலைப்பில் அரசு ஊழியர்களிடம் உரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய அவர், “அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது திமுக அரசு தான். திருமணக்கடன், வாகன கடன், வீட்டுக்கடன் அரசு ஊழியர்களுக்கு வழங்கியது திமுக. பத்தாயிரம் சாலைப்பணியாளர்கள், ஏழாயிரம் அரசு ஊழியர்களை நியமித்தது திமுக. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மாநிலத்தின் அடிநாதம். மக்கள் திட்டங்களை அவர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பவர்கள் அரசு ஊழியர்கள். எதிர்கால தலைமுறைகளை இந்தியாவின் எதிர்கால சக்தியான இளைய சக்திகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு அதிமுக அரசு. ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கை சார்ந்த போராட்டங்களை அரசு கண்டுகொள்ளவில்லை.

அரசு ஊழியர்கள் மத்தியில் அதிமுக குறித்து ஏத்திவிடும் ஸ்டாலின்

கொரானா காலம் முதற்கொண்டு தற்போது வரை கடுமையாக பணியாற்றி வருபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைத்து பணியாற்றும் அரசு ஊழியர்களை அரசு கண்டுகொள்ளவில்லை. அரசு ஊழியர்கள் சம்பளத்தை பொதுவெளியில் சொல்லியவர் முதல்வர். தலைமையாசிரியர்களுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் எனக்கேட்டவர் முதல்வர். அரசு ஊழியர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் பேசினார். ஊழல் லஞ்ச லாவண்யத்தில் திளைப்பது அதிமுக அரசு. அமைச்சர்கள் தொடங்கி அனைவரும் ஊழல் செய்து வருகின்றனர்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர் சங்கத்தின் அனைத்து கோரிக்கைகளும் கட்டாயம் நிறைவேற்றப்படும். டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் எப்படி அழைத்து பேச மாட்டாரோ அதுபோல முதல்வரும் அரசு ஊழியர்களை அழைத்து பேச மாட்டார். அரசு ஊழியர்கள் பிப்ரவரி மாதம் முதல் நடத்த உள்ள போராட்டத்திற்கு திமுக தார்மீக முறையில் ஆதரவு அளிக்கும். பொதுமக்கள் மத்தியில் அரசு ஊழியர்களின் பெயரைகெடுக்க நினைத்தவர் முதல்வர்” எனக் குற்றஞ்சாட்டினார்.