ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
திராவிட இயக்க தலைவர்களாக வாழ்ந்து மறைந்த சம்பத், அதிமுகவின் முன்னாள் அமைப்புச் செயலாளர் திருமதி ஈவிகேஸ் சுலோச்சனா சம்பத் ஆகியோர்களின் புதல்வரும் காங்கிரஸ் கட்சியின் உடைய முன்னாள் தலைவரும், தந்தை பெரியார் அவர்களின் பேரனும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் நேற்று மரணமடைந்தார்.
இந்நிலையில் ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். நேற்று அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ஈவிகேஎஸ் இளங்கோவனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது. மாலை 4 மணி அளவில் முகலிவாக்கம் எல் அண்ட் டி காலனி பகுதியில் உள்ள மின் மயானத்தில் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.