தரமற்ற பொங்கல் பரிசு... நேரடியாக களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு!

 
ஸ்டாலின்

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வழங்கி வருகிறது. இத்திட்டத்தை ஜன.4ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ஆரம்பத்தில் பெரும் வரவேற்பு பெற்றது. பணம் கொடுக்காவிட்டாலும் பொருட்கள் அனைத்தும் தரமாக இருக்கிறது என பலரும் மகிழ்ச்சியாகக் கூறினர். ஆனால் சில தினங்களாக தரமற்ற பொருட்களை வழங்குவதாக வீடியோக்களும் செய்திகளும் வலம் வந்துகொண்டே இருக்கின்றன. 

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ரேசன் கடையில் திடீரென ஆய்வு: செய்த முதல்வர்  மு.க.ஸ்டாலின்

இது முதலமைச்சர் ஸ்டாலின் காதுகளுக்கும் எட்டியது. அனைத்தும் சரியாக செய்தும் ஏன் இப்படி தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்பட்டன என அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ரெய்டு விட்டுள்ளார். உள்ளபடியே பரவும் தகவல்கள் உண்மை தானா என கண்டறியவும் உத்தரவிட்டிருக்கிறார். இச்சூழலில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்றாலும் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உவகையுடன் கொண்டாடும் வகையில், கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தேன். 

பொங்கல் பரிசு தொகுப்பு.. பொதுமக்களுக்கு அதிர்ச்சி..!! - Seithipunal

இதன்படி 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் - நமது அரசுக்குப் பெரும் நிதி நெருக்கடி நிலவி வரும் இச்சூழலிலும் மக்களின் நலன்கருதி 1,297 கோடி ரூபாய் செலவில் இத்தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை நானே நேரடியாகச் சென்று நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்தேன். மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தைப் பற்றிச் சிலர் தவறான விஷமத்தனமான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். 

ஒன்னுத்துக்கும் ஆகாத பொங்கல் பரிசு தொகுப்பு… பூரா வண்டு… கேட்டா அடிக்க  வராங்க!! | pongal parisu is not in good quality said ramanathapuram women

எனவே, இந்தப் பணிகள் முறையாக நடைபெற்று வருவதையும், தரமான பொருட்கள் எவ்வித புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணிகளை, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.