கிராண்ட் மாஸ்டர் குகேஷ்-க்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
tn

தமிழ்நாடு அரசு சார்பில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்-க்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ். உலகளவில் ஃபிடே ஓபன் தரவரிசையில் அவர் 8-ம் இடம் பிடித்துள்ளார். குறிப்பாக தனது ஆஸ்தான வழிகாட்டி விஸ்வநாதன் ஆனந்தை  இவர் முந்தியுள்ளார். 


இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீர்ர் செல்வன். டி. குகேஷ் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது  முதலமைச்சர்  செல்வன் குகேஷுக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். அப்போது  முதலமைச்சர் செல்வன் குகேஷ் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். உடன் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் திரு. எம்.வி.எம். வேல்மோகன் மற்றும் செல்வன் குகேஷ் அவர்களின் பெற்றோர் ஆகியோர் உள்ளனர்.