பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த திமுக இளைஞரணி 47-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது - மு.க.ஸ்டாலின்..!

 
1

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி இன்று தனது 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.


இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; கொள்கைப் பணி, மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் தி.மு.க இளைஞர் அணி 47ஆவது ஆண்டில் அடுயெடுத்து வைப்பதையொட்டி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த திமுக இளைஞரணி 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!

அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!

என பதிவிட்டுள்ளார்.