காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

 
1

தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தென் தமிழகத்திலிருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் உருவாக இந்த வெற்றி பெரும் ஊக்கமளிப்பதாக அமையட்டும் என்று அவர் பாராட்டியுள்ளார். 

அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,

#CWG2026-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு என் பாராட்டுகள்.

தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றி ஊக்கமளிக்கட்டும்! கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்!