"நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க" - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!

 
tn

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. நாளை தொடங்கும் பொதுத் தேர்வு மே 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.  அதேபோல் 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் நிலையில்,  10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

school

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை 3,119 மையங்களில்  8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் எழுத உள்ளனர். பொதுத்தேர்வை மூன்று லட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்களும்,  4 லட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகளும் எழுத உள்ளனர். இதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு,  10ம் தேதி தொடங்கி  31ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும்  என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல் பொதுத்தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் காலை 9.45 மணிக்கு தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும். காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதி வழங்கப்படும்.காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 மணிவரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல! நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க! " என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.