ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்கள் நலன்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர் என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, தவெக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்கள் நலன்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர் என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுதந்திரதின உரையில் அரசுக்கு எதிராக ஆளுநர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

