திண்டுக்கல்லில் மின்கசிவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம்- மு.க.ஸ்டாலின்

 
mks-talin-4

திண்டுக்கல்‌ மாவட்டத்தில்‌ மின்‌ கசிவின்‌ காரணமாக ஏற்பட்ட விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.

DMK poll promises have been fulfilled: MK Stalin - The South First

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல்‌ மாவட்டம்‌, வேடசந்தூர்‌ வட்டம்‌, கொம்பேரிபட்டி கிராமம்‌, மம்மானியூரில்‌ கடந்த 05:114.2023 அன்று மாலை சுமார்‌ 06:30 மணியளவில்‌, செல்வன்‌.சு.குமார்‌ (வயது:6) என்ற சிறுவன்‌ அவருடைய விட்டில்‌ தகரத்தினால்‌ செய்யப்பட்டிருந்த கதவை திறக்க முயன்ற போது மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது. அப்போது, விபத்திலிருந்து அச்சிறுவனை காப்பாற்ற முற்பட்ட சிறுவனின்‌ அக்கா செல்வி.சு.அழகுமினா, த/பெசுந்தரம்‌ வயது 16.(பெண்‌) அவருக்கும்‌ மின்சாரம்‌ பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும்‌ உயிரிழந்து விட்டனர்‌.  

இவ்விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ அவர்களது உறவினர்களுக்கும்‌ ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு உயிரிழந்தவர்களின்‌ குடும்ப சூழ்நிலையினை கருத்திற்‌ கொண்டு கருணை அடிப்படையில்‌ தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ ரூபாய்‌ ஐந்து இலட்சம்‌ வழங்கப்படும்‌ என தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.