வங்கி மேலாளர் கன்னத்தில் ஓங்கி அறைந்த மு.க.அழகிரி மகள் கயல்விழி

 
ச்

சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளர் கன்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. 


சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளர் கன்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.  அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்துள்ளார். லிப்ட் செயல்பாடு தொடர்பான பிரச்சனை குறித்து பேச வந்த போது வங்கி மேலாளருடன் கயல்விழி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கயல்விழி கோபமாக பேசுவதை வங்கி மேலாளர் கன்னத்தில் கையை வைத்து கேட்டுக் கொண்டு இருந்ததால் ஆத்திரமடைந்த அவர் ஓங்கி கன்னத்தில் அறைந்தார். 



இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பிஐ ஆர்.பி.ஓ-IISBI RBO-II முதன்மை மேலாளர் நமச்சிவாயம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து எஸ்பிஐ வங்கி மேலாளரை அறைந்த விவகாரத்தில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.