ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா : நலம் பெற முதல்வர் வாழ்த்து!!

 
tn

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் கொரோனாவிலிருந்து குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். 

மூத்த அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமானவர் ஆர்.எம்.வீரப்பன். இவர் எம்ஜிஆர் கழகத் தலைவருமாவார். அதிமுகவில் பொறுப்பில் இருந்த போதிலும் திமுகவினருடன் நட்பு பாராட்டி வந்தார். 95 வயதான இவர் சென்னை  தியாகராய நகரில் உள்ள இல்லத்தில்  குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

rn

இந்த சூழலில்  எம்ஜிஆர் கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. இராம.வீரப்பன் அவர்களுக்கு #COVID19 தொற்று உறுதியாகி இருப்பதாக அறிந்தேன்.
அவர் விரைவில் முழுமையாக நலம்பெற வேண்டும் என விழைகிறேன் என்று குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.