MJ இஸ் பேக்..! மைக்கேல் ஜாக்சன் பயோபிக் படத்தின் டிரெய்லர் வெளியானது..!
அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதி பிறந்தவர் மைக்கேல் ஜாக்சன்.
சிறுவயதிலேயே இசை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார். தனது பாடல்கள் மூலம் அமெரிக்காவில் நிலவிய நிறவெறி, காவல்துறை வன்முறை, சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட பல சமூக விழிப்புணர்வு கருத்துகளையும் மைக்கேல் ஜாக்சன் பேசினார். அவரது ‘மேன் இன் தி மிரர்’, ‘பிளாக் ஆர் வயிட்’, ‘டேஞ்சரஸ்’ உள்ளிட்ட பல பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது.
பாடல்கள் மட்டுமின்றி, மைக்கேல் ஜாக்சனின் தனித்துவமான நடன அசைவுகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அவர் உருவாக்கிய ‘மூன் வாக்’ என்ற நடன அசைவு உலகப் புகழ் பெற்றது. அவரது இசை ஆல்பங்களின் கேசட்டுகள் மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்தன. உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் மைக்கேல் ஜாக்சன்.
கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்தார்.
மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு ‘மைக்கேல்’ என்ற பெயரில் பயோபிக் படமாக தயாராகி வந்தது. இந்த படத்தை ஆண்டோயின் புகுவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் அவரது சொந்த அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்துள்ளார். 'கிளாடியேட்டர்' புகழ் ஜான் லோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.
இந்நிலையில், மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு படமான ‘மைக்கேல்’ டிரெய்லர் நாளை வெளியாகியுள்ளது . இந்த படம் ஏப்ரல் 24-ந்தேதி திரைக்கு வருகிறது.
His story begins.
— Michael (@michaelmovie) February 2, 2026
The official trailer for MICHAEL – in theaters and IMAX April 24. pic.twitter.com/DfGJNcuXU2


