ராணிப்பேட்டையில் மாயமான குழந்தை ஆந்திராவில் மீட்பு..!!

 
Q

ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடத்தப்பட்ட ஒரு வயது பெண் குழந்தையை சிப்காட் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்.அதேபோல, விழுப்புரம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா.

2ம் வகுப்பு படித்து வரும் இவர், பிறந்த நாளான அக்.,12ம் தேதி முதல் காணாமல் போனார். 8 தனிப்படைகள் அமைத்து சிறுமியை தேடி வந்தனர். விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கடந்த 7 தினங்களாக பல கோணங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் என 20க்கும் மேற்பட்ட நபர்களிடம், விசாரணை நடத்தப்பட்டது.

சிறுமியின் அக்கா படித்த நர்சிங் கல்லூரியிலும் விசாரணை நடத்தப்பட்டது.