காணாமல்போன 5 வயது சிறுமி சடலமாக மீட்பு! ராமநாதபுரத்தில் சோகம்

 
ச்

ராமநாதபுரத்தில் வீட்டு திண்ணையில் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி அதிகாலையில் மாயமான நிலையில் பக்கத்து வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் பசும்பொன் நகரில் உள்ள வீட்டு திண்ணையில் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி, தனது பாட்டியுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை அவரை காணாமல்போனதாக பெற்றோர் கூறியதை அடுத்து, போலீசார் உதவியுடன் அக்கம்பக்கதினரும் தேடியுள்ளனர். இந்நிலையில் இந்நிலையில் பக்கத்து வீட்டு கிணற்றில் அந்த சிறுமி சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. நான்கு மணி நேர தேடலுக்குப் பிறகு கிணற்றில் இருந்த சிறுமியின் உடலை போலீசார் மீட்டனர். அந்த சிறுமியின் குடும்பத்துக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் நேரில் சென்று ஆறுதல் கூறினார். சடலத்தை கைப்பற்றிய போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.