கோவில் நிதியில் முறைகேடு : ஆலயம் காப்போம் பவுண்டேஷன் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு..!

 
1

கோவில் நிதியில் முறைகேடுகள் நடப்பதாக ஆலயம் காப்போம் பவுண்டேஷன் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தொடரப்பட்டது.

இந்த மனு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு வரும் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது? என்று அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

கோவில் நன்கொடை நிதியை கல்வி நிலையங்கள் போன்ற சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கோயில் நிதியில் உயர்ரக கார்கள் வாங்குவது, சொகுசு காரியங்களுக்காக அரசு பயன்படுத்தினால் தவறு என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.