சென்னையில் 30 கோயில்களில் சுதந்திர தின விழா பொது விருந்து - அமைச்சர்கள் பங்கேற்பு..!!
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தையொட்டி கோவில்களில் சமபந்தி விருந்து வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டும் சென்னையில் 30 கோயில்களில் சுதந்திர தின விழா பொது விருந்து நடைபெறுகிறது : அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னையில் உள்ள முக்கிய 30 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலிலும், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் வடபழனி முருகன் கோயிலிலும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோயிலிலும், அமைச்சர் கீர்த்தனா மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலிலும், அமைச்சர் செங்கோட்டையன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் வெங்கட்ரமணனும், பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் அமைச்சர் நிர்மல் குமாரும், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் அமைச்சர் டி கே பிரபுவும் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

