#BREAKING கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருடன் அமைச்சர்கள், தலைமைச் செயலர் திடீர் ஆலோசனை

 
tn govt

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருடன் காணொலி மூலம் சென்னையில் இருந்தபடி அமைச்சர்கள், தலைமைச் செயலர் திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். 


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் மதுபோதையில் அவரது வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்து, தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து விளக்கம் அளித்த தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், "என்னை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுகவினர் வதந்திகளைப் பரப்புகின்றனர். என் மீதும் தவெக ஆட்சி மீதும் களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். அதிகாரிகள் மீது பெரிய மரியாதையும், மதிப்பும் எனக்கு இருக்கிறது. அதுமாதிரியான செயல் எதுவும் நான் செய்யவில்லை. ஏன் இப்படி தவறான வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கும் தெரியவில்லை" என்றார். 

இந்நிலையில்  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருடன் காணொலி மூலம் சென்னையில் இருந்தபடி அமைச்சர்கள், தலைமைச் செயலர் திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். தவெக எம். எல். ஏ அருள் விக்னேஷ் மீதான புகார் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.