சிலிண்டர்களை பதுக்கினால் சட்டப்படி நடவடிக்கை- அமைச்சர் எச்சரிக்கை

 
  கேஸ் சிலிண்டர் விலை  உயர்வு

ஹோட்டல்கள், கேட்ரிங் உரிமையாளர்கள், சிறு குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் விரைவில் ஆலோசனை நடைபெறும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு...” - அமைச்சர் சக்கரபாணி முக்கிய  அறிவிப்பு!

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்பட்டு வரும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஹோட்டல் சங்க நிர்வாகிகள், எச்பி, இண்டன், பாரத் உள்ளிட்ட எண்ணெய் நிறுவன பிரநிதிகள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், தலைமை செயலாளர், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர், பொது துறை செயலாளர், தொழில் துறை செயலாளர், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக உபயோக சிலிண்டர் கையிருப்பு மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களின் கோரிக்கை உள்ளிட்டவைகள் தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் 20 நாட்களுக்கு கையிருப்பு உள்ளதாகவும் வணிக சிலிண்டர் மட்டுமே தட்டுப்பாடாக உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்ததாக கூறினார். கேட்டரிங் உரிமையாளர்களை பொருத்தவரையில் வரும் நாட்களில் திருமணங்களுக்கு உணவு சமையல் செய்ய சிலிண்டர் கட்டாயம் வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அரசு ஏதாவது சலுகை அளித்தால் மின்சாரத்தை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்ததாக கூறினார். குறிப்பாக பெட்ரோலியத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தமிழ்நாடு அரசால் என்ன செய்ய முடியுமோ அவற்றை அரசு உறுதியாக செய்யும் என்று ஹோட்டல் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். குறிப்பாக சட்டத்திற்கு புறம்பாக யாராவது பதுக்கல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். இதைத் தவிர்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் முதலமைச்சர் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து உரிய அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்