பட்டாசு ஆலைகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை..!

 
1

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் பேசியதாவது 

சிவகாசியில் தற்போது நிகழ்ந்துள்ள பட்டாசு ஆலை வெடி விபத்திற்குப் பேராசைதான் காரணம் என்றார் அவர்.

“பட்டாசு ஆலைகளின் நிர்வாகங்கள் பேராசை காரணமாக விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை. அதனால்தான் விபத்துகள் நிகழ்கின்றன.

“தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு அடுத்த இரு நாள்களில் விபத்தில் உயிரிழந்தோருக்கான இழப்பீடுகள் அறிவிக்கப்படும்.

“ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்,” என்றார் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்.

முன்னதாக, விபத்தில் உயிரிழந்தோருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி, ஆலை உரிமையாளர் தரப்பு ரூ.10 லட்சம் ரூபாயும் இறுதிச்சடங்கு செலவுக்கு 50,000 ரூபாயும் உடனடியாக வழங்க வேண்டும் என விபத்தில் பலியானோர் குடும்பத்தார் வலியுறுத்தினர்.அதுவரை உயிரிழந்தோரின் உடல்களை வாங்க மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாக அறிவித்தனர்.