"காங்கிரஸ் தலைவிதியே மாறிருக்கும்" - அமைச்சர் விஸ்வநாதன்
Jun 29, 2026, 21:53 IST1782750218340
மாணிக்கம்தாகூர், பிரவீண் சக்கரவர்த்தி பேச்சை கேட்டு சம்யோசிதமாக யோசித்திருந்தால் காங்கிரஸின் தலைவிதியே மாறியிருக்கும் என அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், “மாணிக்கம்தாகூர், பிரவீண் சக்கரவர்த்தி பேச்சை கேட்டு சம்யோசிதமாக யோசித்திருந்தால் காங்கிரஸின் தலைவிதியே மாறியிருக்கும். 70 எம்.எல்.ஏக்கள், 1 துணை முதலமைச்சர், 10 அமைச்சர்கள் என சத்தியமூர்த்தி பவனில் சுழல்கிற விளக்கு காரில் வலம் வந்திருப்பார்கள்” என்றார்.

