அமைச்சரவையில் இடம்பெற மாட்டோமா என ஏக்கத்தில் இருந்தோம்- அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு

 
அமைச்சரவையில் இடம்பெற மாட்டோமா என ஏக்கத்தில் இருந்தோம்- அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு

முதலமைச்சர் விஜய் சார் ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.. பூசாரியின் மகனாக பிறந்து வெட்டியானாக இருந்த கக்கனை உள்துறை அமைச்சர் ஆக்கியது காங்கிரஸ் என திமுகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் பதிலடி கொடுத்தார். 

சட்டப்பேரவையில் உரையாற்றிய காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன், “தமிழ்நாட்டு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி ஒருநாளாவது இடம் பெறாதா என ஏக்கத்தில் இருந்தோம். 1984 இல் 61 இடங்களில் வெற்றி பெற்றும் எம்.ஜி.ஆரிடம் அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை. 1991 இல் 60 இடங்களில் வெற்றி பெற்றும் அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை. 1996 இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 31 இடத்தில் வெற்றி பெற்றும் அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை. 2006 இல் 34 இடங்களில் வெற்றி பெற்றும் வெறும் 96 இடங்களை பெற்றிருந்த திமுகவுக்கு தோள் கொடுத்து நின்றது காங்கிரஸ். 59 ஆண்டுகள் கழித்து சாத்தியம் இல்லாததை சாத்தியப்படுத்தி காட்டியவர் விஜய். எனக்கு வாழ்க்கை தொடங்கும்போது வசந்தமும் இல்லை வசதியும் இல்லை. எனக்கு வாழ்க்கை தொடங்கும்போது வசந்தமும் இல்லை வசதியும் இல்லை. திமுக ஆட்சியில் மந்திரி சபையில் இடம் கேட்டோம் - தர மறுத்துவிட்டனர். அமைச்சர் பதவி, அதிகாரம் நீங்கள் மட்டும்தான் கொடுத்ததா..? முதலமைச்சர் விஜய் சார் ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.. பூசாரியின் மகனாக பிறந்து வெட்டியானாக இருந்த கக்கனை உள்துறை அமைச்சர் ஆக்கியது காங்கிரஸ்” என்றார்.