விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் உயர்வு! பள்ளி மாணவர்களுக்கு AI பாடம்
சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் விஸ்வநாதன்.
சட்டசபையில் கல்வித்துறை முக்கிய அறிவிப்புகள்!
அரசு கல்லூரியில் படிக்கும் 2 ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் முழு கல்விகட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்படும்
அரசு கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.30,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்வு.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்வு.
அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி அறிமுகம்; மாதம் ஒருநாள் ‘புத்தகப் பை இல்லாத நாள்' கடைப்பிடிக்கப்படும்.
2 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களின் திறன்களை உறுதி செய்ய 10.5 லட்சம் மாணவர்களுக்கு 'திறன் ப்ளஸ்' திட்டம் செயல்படுத்தப்படும்.
மாணவர்களின் தனித்துவமான கற்றலை வலுப்படுத்த ‘தன்னிலை கற்றல் திட்டம்' செயல்படுத்தப்படும்.
உயர்கல்வி பயிலும் திருநர் மாணவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி
மாநில உருது அகாடமியில் உருது மொழி மேம்பாடு திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
நடப்பு சட்டசபை அமர்வில் முதல்வர் ஜோசப் விஜய் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் நல்ல செய்தி அறிவிப்பார்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 6000 உதவி பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்படுவார்கள்
உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1000 கோடியில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும்
அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள், அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு 2026 செப்டம்பர் முதல் கேரியர் அட்வான்ஸ்மென்ட் திட்டம் (CAS) தொடரப்படும்

