“லஞ்சம், ஊழல், முறைகேடான பணிமாறுதல், பணி நியமனம் போன்ற எதற்கும் இனி இடமில்லை”- அமைச்சர் விஸ்வநாதன்

 
ச்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், “உயர்கல்வித் துறையில் லஞ்சம், ஊழல், முறைகேடான பணிமாறுதல் அல்லது பணி நியமனம் போன்ற எதற்கும் இனி இடமில்லை.. அடுத்த தலைமுறைக்கு ஒரு லஞ்சமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையான நல்லாட்சியை வழங்குவதே முதலமைச்சரின் நோக்கம். அமைச்சரவையில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழலை அறவே ஒழிக்கத் தீர்மானம் போட்டுள்ளோம். தவெக அமைச்சரவையில் இருப்பவர்கள் ரொம்ப ஷார்ப்பா இருக்கிறார்கள். விஜய் தலைமையில் மகத்தான புரட்சி உருவாகி இருக்கிறது. அமைதி புரட்சி ஏற்பட்டிருக்கிறது. லஞ்சம் இல்லாத அரசை உருவாக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். லஞ்சம் இல்லா நிர்வாகத்தை தர அலுவலர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசித்து இன்று அல்லது நாளை முடிவு அறிவிக்கப்படும்.