"இன்னும் 100 ஆண்டுகள் விஜய் பெயர் இல்லாமல் அரசியலே கிடையாது" - அமைச்சர் விஜய் பாலாஜி

 
s

இனி விஜய் இல்லாமல் அரசியல் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜய் பாலாஜி பேசினார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் விஜய் பாலாஜி, “விஜய் ரசிகராக அவருடன் ஒரு காட்சியாவது நடித்துவிட வேண்டும் என ஆசை இருந்தது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசும் போதெல்லாம் நானும் கேமிராவில் தவறாமல் வந்துவிடுகிறேன். இந்த இடம் அதிர்ஷ்டமான இருக்கையாக ஆகிவிட்டது. அதை ஏற்படுத்தி தந்த முதலமைச்சருக்கு நன்றி. நாங்க தந்தை பெரியாரை பார்த்தது கிடையாது, பெருந்தலைவர் காமராஜரை பார்த்தது கிடையாது, பேரறிஞர் அண்ணாவை பார்த்தது கிடையாது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை பார்த்தது கிடையாது.. பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களை எப்படி அரைநூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் புகழ்கிறார்களோ அதே போல் இன்னும் 100 ஆண்டுகள் விஜய் பெயர் இல்லாமல் அரசியலே கிடையாது.

கோவில், கல்வெட்டுக்கள் மட்டும் வரலாறு அல்ல. தமிழர்களின் நாகரீக வரலாறு கைத்தறி . ஏன் நெசவாளர் குடும்பங்கள் இந்த தொழிலை விட்டு செல்கிறார்கள், இளைஞர்கள் இந்த தொழிலுக்கு வருவதில்லை? காலம் மாறியதுபோல் நமது அணுகுமுறையும் மாற வேண்டும். புதிய சந்தைகள் வேண்டும், லாபகரமாக நிலையான தொழிலாகக் கைத்தறியை மாற்ற வேண்டும். நெசவாளர்களை தொழில் முனைவோராக அரசாங்கம் மாற்ற வேண்டும், கைதறியை உலக சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.