பழனியில் உள்ள தனது சொந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து பழைய நினைவுகளை பகிர்ந்த அமைச்சர் விக்னேஷ்

 
ச்

பழனியில் தனது தாயாரின் சொந்த ஊரான வண்டிவாய்க்காலுக்கு சென்ற அமைச்சர் விக்னேஷ் சிறுவயது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

பழனியில் உள்ள தனது சொந்த வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து தனது பழைய நினைவுகளை பகிர்ந்த அமைச்சர் விக்னேஷ், “நான் இங்கு வந்து 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. இங்கு இப்போது பார்க்கும் போது என் மனதிற்குள் பழைய நினைவுகளெல்லாம் அலை அலையாக வந்து போகிறது. என் அப்பாவும், அண்ணனும் என்னோடு இல்லை. அவர்களையும் எனது உறவினர்களையும் இந்த இடத்தில் நான் ரொம்ப Miss பண்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ், “டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ. 10, ரூ.20 அதிகம் வாங்குவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. அதுமட்டும்தான் வெளியில் தெரிகிறது; ஆனால், ஊழியர்கள் மேல் எடுக்கும் நடவடிக்கைகள் வெளியில் தெரிவதில்லை” என்றார்.