மதுவிற்பனை சாதனை அல்ல, வெட்கப்பட வேண்டிய விஷயம்: விக்னேஷ்
Updated: Nov 10, 2026, 17:24 IST1794311678006
டாஸ்மாக் வருமானம் என்பது சாதனை அல்ல, வெட்கப்பட வேண்டிய விஷயம் என அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், "டாஸ்மாக் வருமானத்தை பெரிய செய்தியாகப் போடுவதால் மக்களுக்கு என்ன பயன்? இதுமாதிரியான விஷயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதீர்கள். எங்களுடைய நோக்கம் என்பது 234 தொகுதிகளிலும் போதை மறுவாழ்வு மையங்களைக் கொண்டுவருவதுதான். டாஸ்மாக் வருமானம், மது விற்பனை என்பது சாதனை அல்ல, வெட்கப்பட வேண்டிய விஷயம். வரும் காலங்களில் மதுவினால் ஏற்படும் தீமைகளை உளவியல் ரீதியாக கூறி கட்டுப்படுத்த வேண்டும். போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள்தான் தொடர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்; போதை மறுவாழ்வு மையங்களை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

