“மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை”-அமைச்சர் விக்னேஷ்

 
“மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை”-அமைச்சர் விக்னேஷ்

மதுபாட்டில்களின் எம்ஆர்பி விலையில் சேர்க்கப்படும் ரூ.10, காலி பாட்டிலை திருப்பி ஒப்படைக்கும்போது நுகர்வோருக்கு மீண்டும் வழங்கப்படும் என மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார். 


தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், "மதுபாட்டில்களின் எம்ஆர்பி விலையில் சேர்க்கப்படும் ரூ.10, காலி பாட்டிலை திருப்பி ஒப்படைக்கும்போது நுகர்வோருக்கு மீண்டும் வழங்கப்படும். பாட்டில்களை திருப்பி ஒப்படைக்காதவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகை அரசுக்கு சேரும். மதுபானங்களின் விலை உயர்த்தப்படவில்லை. பாட்டில்களை திருப்பி வழங்குவதற்கான கட்டண நடைமுறையே கொண்டுவரப்பட்டுள்ளது. காலி மதுபாட்டிலுக்காக தனியாக வசூலித்த ரூ.10 தற்போது எம்.ஆர். பி. யில் சேர்க்கப்பட்டுள்ளது.  காலி பாட்டில்களை திரும்ப பெறுவதில் முறைகேட்டை தடுக்கவே புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.