டாஸ்மாக் பார்களில் இனி உணவுக் கூடம் நடத்திக் கொள்ளலாம்: அமைச்சர் விக்னேஷ்
Sep 17, 2026, 17:44 IST1789647278761
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களில் இனி உணவு கூடங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும், இதற்கான புதிய டெண்டர் பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் விடப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “டாஸ்மாக் பார்களில் உணவகங்களுக்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. சுகாதாரமற்ற உணவுகள் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். உணவகங்கள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். பார்களில் பிரத்யேக உணவுக் கூடங்கள் அமைக்கப்படும்போது அங்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை அதிகாரிகளால் முறையாக ஆய்வு செய்ய முடியும்” என்றார்.

