மதுபானங்கள் டோர் டெலிவரியா?- அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
ஆன்லைன் முன்பதிவு திட்டத்தால் வீடுகளுக்கே சென்று டாஸ்மாக் மது விநியோகம் செய்யப்படாது என அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

வீடு தேடி மதுபானம் வரும் என்று சொவ்லது தவறு. ஆன்லைனில் முன்பதிவு என்பது சோதனை அடிப்படையில் நடக்கிறது. மதுபானம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான தகவல். டோர் டெலிவரி செய்யும் அளவுக்கு மதுபானம் என்ன அவசிய பொருளா? ஒரு கூட்டம் தவறாக வழிநடத்துகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு கடையில் சென்றுதான் மதுவை வாங்க வேண்டும். ஆன்லைன் மூலம் மதுவிற்பனை செய்யும் திட்டமில்லை. மதுவுக்கு முன்பதிவு மட்டுமே செய்யப்படும். 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுபானம் கிடையாது, கடைக்கு சென்றுதான் வாங்க வேண்டும் என்பதால் வயது உறுதி செய்யப்படும். மதுபானங்களின் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை.
மக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை. ஊழலை குறைத்தாலே அரசிற்கான வருவாய் அதிகரிக்கும். பாட்டிலுக்கு கூடுதல் ரூபாய் வசூலிக்கும் நடைமுறை 2011 ஆம் ஆண்டு முதலே உள்ளது. தவெக அரசு மட்டுமே இதன்மீது நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார்.

