“ரசிகராக படம் பார்க்கவே ஆசை... அந்த 3 மணி நேரம் மட்டும் முதல்வர் அனுமதி தர வேண்டும்”- அமைச்சர் விக்னேஷ்

 
ச்

தமிழகத்தில் எந்தக் கட்சி தொடங்கினாலும் பெருந்தலைவர் காமராஜரை தவிர்க்க முடியாது என்றும், அவரது கொள்கைகளையும் ஆட்சிமுறையையும் பின்பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கும் மாணவர்களுக்கும் நிச்சயமாக நல்லாட்சி வழங்குவோம் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “தமிழகத்தில் எந்தக் கட்சி தொடங்கினாலும் பெருந்தலைவர் காமராஜரை தவிர்க்க முடியாது, அவரது கொள்கைகளையும் ஆட்சிமுறையையும் பின்பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கும் மாணவர்களுக்கும் நிச்சயமாக நல்லாட்சி வழங்குவோம். ஜனநாயகன் படம் வெளியாகும் நேரத்தில் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். படம் வெளியாகும் நேரம் மட்டும், பழைய ரசிகராக செயல்பட அனுமதி கேட்டோம். இனி வாழ்க்கையில் எப்போது முதல் நாள், முதல் காட்சி என்பது தெரியவில்லை. படம் வெளியாகும் 3 மணி நேரம் மட்டும் முதல்வர் அனுமதி தர வேண்டும். வழக்கமாக பார்க்கும் தியேட்டரில் ஜனநாயகன் படம் பார்க்க விரும்புகிறேன். ‘ஜனநாயகன்’ படத்தை பார்ப்பதற்காக ஏற்கனவே நான் லீவு சொல்லிவிட்டேன். முதல்வர் இன்னும் அனுமதிக்கவில்லை.

மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவது அரசின் நோக்கமல்ல.. கடந்த கால தவறுகளை சரிசெய்து வருகிறோம்.. டாஸ்மாக்கை தனியாருக்கு மாற்றும் எண்ணம் இல்லை.. கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.. துறை சார்ந்த கூடுதல் சீர்திருத்தங்கள் விரைவில் சட்டப்பேரவையில் விரிவாக விவாதிக்கப்படும்” என்றார்.