"எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்"- அமைச்சர் விக்னேஷ்
எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விக்னேஷ், “எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தொழிலாளர்கள் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம். தற்போதுள்ள நிதிச் சூழலை புரிந்துகொண்டு அரசின் சீரமைப்பு முயற்சிக்கு தொழிலாளர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். டாஸ்மாக் தொழிலாளர்களுடன் நேரடியாக பேசினேன். தொழிலாளர்கள் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பின்விளைவுகளை ஏற்படுத்தும் போராட்டங்களை கைவிட்டு அரசுக்கு தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வசதியை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த அரசு தொழிலாளர்களின் நலனுக்காக சம்பள உயர்வு, ESI உள்ளிட்ட பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது. அரசின் மீது நம்பிக்கை வைத்து, இந்தத் துறையை நாமெல்லாம் சேர்ந்து சீரமைப்போம்.” என்றார்.

