பாட்டிலுக்கு ரூ.10 பிரச்சினைக்கு தீர்வு- டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

 
ச்

பாட்டிலுக்கு ரூ.10 பிரச்சினைக்கு தீர்வு காண டாஸ்மாக் பணியாளர்களுக்கு 25% சம்பள உயர்வு வழங்கப்படவிருப்பதாக அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “பாட்டிலுக்கு ரூ.10 பிரச்சினைக்கு தீர்வு காண டாஸ்மாக் பணியாளர்களுக்கு 25% சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.3,500 முதல் ரூ.5000 வரை சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது. டாஸ்மாக் துணை விற்பனையாளர்கள் சம்பளம் ரூ.17,925 ஆக உயர்வு வழங்கப்படவுள்ளது. டாஸ்மாக் விற்பனையாளர்கள் சம்பளம் ரூ.19,413 ஆக உயர்வு வழங்கப்படவுள்ளது. டாஸ்மாக் மேற்பார்வையாளர் சம்பளம் ரூ.22,313 ஆக உயர்த்தப்படுகிறது.


கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதை தடுத்து நிறுத்தியுள்ளோம். டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்குபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இரவில் 10 மணிக்கு மேல், பகலில் 12 மணிக்குள்ளாக சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை நிறுத்தி உள்ளோம் டாஸ்மாக் கடைகளில் மது பானங்கள் விலை உயா்த்தப்படாது. இனிமேல் கூடுதல் விலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தால் பணிநீக்கம் வரை நடவடிக்கை இருக்கும்” என்றார்.